உம்முடைய வார்த்தையின்படியே AT THY WORD ராபர்ட்ஸ் பார்க் ஆம்பிதியேட்டர், கானர்ஸ்வில், இந்தியானா, அமெரிக்கா 53-06-08E வில்லியம் மரியன் பிரன்ஹாம் உம்முடைய வார்த்தையின்படியே AT THY WORD ராபர்ட்ஸ் பார்க் ஆம்பிதியேட்டர், கானர்ஸ்வில், இந்தியானா, அமெரிக்கா 53-06-08E கிறிஸ்தவ நண்பர்களே, மாலை வணக்கம். ஒரு புதுவார ஆராதனையைத் துவங்குவதற்கு இன்றிரவு மறுபடியும் இங்கே இருப்பது ஒரு மகத்தான சிலாக்கியமாயுள்ளது...நாம் இவ்விடத்தை ஒரு வாரத்திற்கு வைத்திருக்கலாம் என்று அந்த சகோதரன் உங்களிடம் சொல்லியிருக்கிறார் என்று நினைக்கிறேன். நாங்கள் அதற்காக நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். ஒத்துழைப்பு கொடுக்கும் மேய்ப்பர் களாகிய இங்கேயுள்ள இம்மனிதர்களுக்கும், இதைப் பெற்றுக்கொள்ள பெறும்படிக்கு தொடர்ந்து செயலாற்றினவர்களுக்கும் நாங்கள் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். நாங்கள் தங்கும்படி அழைப்பு விடுத்ததற்காக உங்கள் ஒவ்வொருவருக்கும் நாங்கள் நன்றிசெலுத்த விரும்புகிறோம். சகலத்திற்கும் மேலாக, இந்த வாக்குறுதிக்காக நாங்கள் நிச்சயமாகவே தேவனுக்கு நன்றி செலுத்துகிறோம். மேலும் இவ்விடத்தை நாங்கள் வைத்திருக்க அனுமதியளித்ததற்காக, இந்த நகர மேயருக்கும், நகரத்தின் உயர் அலுவலர்களுக்கும் நாங்கள் நன்றிகூற விரும்புகிறோம். கர்த்தர் தாமே அவர்கள் மீது தமது முழு நிறைவான ஆசீர் வாதங்களை அருளுவாராக. இவ்வாரத்தில் தேவனுடைய ஒத்தாசையினாலே, வியாதிப்பட்ட வர்களுக்கும் தேவையுள்ளவர்களுக்கும், இரட்சிப்பு தேவைப்படுகிற வர்களுக்கும், தங்கள் சரீரங்களுக்காகவும் கூட தேவையுள்ள வர்களுக்கும் நம்முடைய கர்த்தரின் நாமத்தில், எவ்வாறு ஊழியம் செய்வது எவ்விதத்தில் என்று நாங்கள் அறிந்த மிகச்சிறந்த முறையில், ஊழியம் செய்ய நாங்கள் முயற்சிப்போம். 2. நாம் இப்பொழுது முயற்சித்துக்கொண்டிருப்பது ஒருவிதத்தில் புதிதானதொரு காரியமாகும். நானாகவே கூட்டங்களை நடத்தும்படி என்னால் எவ்வளவு கூடுமோ அவ்வளவாக மிகச்சிறந்த முறையில் சிறிது காலமாகவே நான் முயற்சித்து வருகிறேன். என்னுடைய மேலாளரோ மற்றும் அவர்களோ இல்லாமலேயே அதைச்செய்ய முயற்சிக்கிறேன் என்றுதான் சொல்லவருகிறேன். பதினேழு வயது பையனாகிய எனது சிறிய மகனையும் என்னையும் தவிர இங்கே வேறு யாருமில்லை. எனவே நானே பிரசிங்கிக்கவும் மற்றும் சிலவற்றை செய்யவும் வேண்டியதாயுள்ளது. எனவே நான்-நான் அதை முயற்சி செய்து பார்க்கவும், கர்த்தர்தாமே அதற்கு உதவி செய்வார் என்று நான்-நான் எப்போதுமே நினைத்ததுண்டு. ஆகவே சிறிது நேரம் நீங்கள் என்னை பொறுத்துக் கொள்ளுங்கள். நான் வழக்கமாக வீட்டில் தங்கியிருந்து, புசிக்காமல் உபவாசத் தோடும், ஜெபத்தோடும் கூட்டங்களுக்கு வந்து, சரியாக நான் மேடைக்கு வழிநடத்தப்பட்டு அங்கிருந்து தொடங்கி, வியாதியஸ் தருக்காக ஜெபித்துக் கொண்டிருப்பேன். நிச்சயமாகவே, அது ஒரு சிறந்த கூட்டத்தை உண்டுபண்ணுகிறது; நான் அதை அறிவேன். ஏனெனில் நீங்கள் ஏற்கனவே அபிஷேகத்தின் கீழ் இருக்கிறீர்கள். ஆனால் இப்பொழுதோ, நான் வந்து ஒரு வசனத்தை வாசிக்க விரும்புகிறேன். வார்த்தையின் பேரில் சற்றுநேரம் பேசிவிட்டு, பிறகு வியாதியஸ்தர்களுக்காக ஜெபிக்க விரும்புகிறேன். எனவே வழக்கமாக மேலாளர்கள் அதைத்தான் செய்கிறார்கள். இப்பொழுது, கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. எங்கும் உங்களுடைய அருமையான ஒத்துழைப்பிற்காக நாங்கள் உங்களுக்கு நன்றி செலுத்துகிறோம். 3. இப்பொழுதும், கடந்த இரவில், அல்லது நேற்று பிற்பகலில், சரியாக அல்லது கடந்த இரவில், அவர்கள் இங்கே இந்தக் கூட்டத்தில், எனக்காக ஒரு அன்பின் காணிக்கையை எடுத்தார்கள். நான் உங்களுக்கு நன்றி செலுத்த விரும்புகிறேன். நீங்கள் அதை எனக்கு கொடுக்க நான் தகுதியற்றவன். அவர்கள் சென்ற இரவில் என்னிடம் கொண்டுவந்து, "இதோ உங்களுக்கான அன்பின் காணிக்கை" என்று கூறும்வரையில் நான் அதைக் குறித்து சிந்தித்துப் பார்க்கவில்லை. ஏன், நான் அதற்காக மிகவும் சந்தோஷப்பட்டேன். கிறிஸ்தவ நண்பரே, மேலும் நான் இதை உங்களுக்கு உறுதிப்படுத்துகிறேன். அதின் ஒவ்வொரு காசையும் வைத்து, என்ன செய்ய வேண்டுமென்று எனக்குத் தெரியவில்லை, தேவனுடைய மகிமைக்காகவே அதை கொடுப்பேன். பணத்தைக் கொண்டு நான் என்ன செய்கிறேன் என்று ஆராய்ந்து கண்டறியும் எவரையும், எவ் வளவு வரவேற்க முடியுமோ, அவ்வளவு வரவேற்கப் படுகிறார்கள். எனது குடும்பத்திற்காக நான் வைத்திருக்கும்படி கட்டாயத் தேவையாக இல்லாத, மற்றும் எனது செலவீனம் மற்றும் செலவு காரியங்களுக்காக நான் வைத்திருக்க அவசியமானதாக இல்லாத ஒவ்வொரு காசும், நேரடியாக மிஷனரி வேலைக்குத்தான் போகிறது. நான் உலகத்தின் மற்ற பாகங்களுக்கு சுவிசேஷத்தை நானாகவே கொண்டு செல்கிறேன். அப்படியானால் அது என்னவென்று பிறகு எனக்குத் தெரியும். 4. நான் ஒருபோதும் என்னுடைய ஜீவியத்தில் காணிக்கை எடுத்ததே கிடையாது. என்னால் அதை ஒருபோதும் செய்ய முடியவில்லை. ஒரு சமயம் எனக்கு நினைவிருக்கிற... சபையிலிருந்து வந்திருக்கும் என் னுடைய ஜனங்களில் சிலர் இங்கே உட்கார்ந்து கொண் டிருக்கிறார்கள். இங்கே சமீபத்தில், அவர்கள்... என்ற ஒரு நிலைக்கு உள்ளானது எனக்கு ஞாபகமிருக்கிறது. நீங்கள் எப்பொழுதாவது தேவைகளுக்கு போதுமான அளவு பணம் வைத்திருக்க முடியாத ஒரு நிலைக்குள்ளாகியிருக்கிறீர்களா? நான் -நான் அங்கே என்னுடைய கூடாரத்தில் பன்னிரண்டு வருடங்களாக ஒரு காசும் இல்லாமல் பிரசங்கம் பண்ணினேன். நான் அநேக வருடங்களாக இந்தியானா மாகாணத்தில், இங்கிருக்கும் இந்த மாவட்டத்தில் கூட, மாநில வேட்டை விலங்குகள் மற்றும் வேட்டையாடுதலை கண்காணிக்கும் அதிகாரி யாக (State Game Warden) இருந்தேன். உயர்மின்னழுத்த மின்சாரத்தைக் கொண்டு செல்லும் மின்கம்பிகளிலும், அதைப் போன்ற மற்றவைகளிலும் ரோந்து சென்று, உழைத்து. என் வாழ்வாதாரத்தை நடத்தினேன். எனக்கு தேவைகள் இல்லாதிருந்தது... ஒரு வேளை ஒரு மனிதனாக, வாலிபனாக இருந்து, என்னால் வேலை செய்ய முடிகிறதென்றால், நான் ஏன் வேலைசெய்யக் கூடாது என்று நான் எப்போதுமே நினைத்ததுண்டு. அதன்பிறகு அந்த வேலையோடு கூட, பிரசங்கமும் பண்ணினேன். 5. ஏறக்குறைய வாரத்தின் ஒவ்வொரு இரவிலும், என்னுடைய சீருடையை அணிந்து கொண்டு உயர்மின்னழுத்த மின்சாரத்தைக் கொண்டு செல்லும் மின்கம்பிகள் நெடுகிலும் நடந்து கொண்டிருப்பேன். யாராவது மனந்திரும்புவதைக் கண்டால், அவர்களை கீழே ஓடைக்கு அழைத்துச்சென்று அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்துவிட்டு, ஈரமான உடையோடு திரும்பவும் தொடர்ந்து போய்க்கொண்டிருப்பேன். அது சரியே. கர்த்தரைக் குறித்துப் - கர்த்தரைப் பற்றி பேசுவதை, வெளியே வயலில் இருக்கும் விவசாயிகளும் மற்றும் எல்லாரும் (everything) பார்த்து, அவர்கள் அழத் தொடங்கி, தங்கள் இருதயத்தை தேவனுக்குக் கொடுப்பார்கள், அப்பொழுது நான் அவர்களை அழைத்துக் கொண்டு, வைக்கோலினால் செய்யப்பட்ட விறைப்பான அந்தத் தொப்பியை இழுத்து எடுத்துவிட்டு, நாங்கள் கீழே ஓடைக்கு இறங்கிச்சென்று சரியாக அங்கேயே அதை வைத்துவிட்டு, களிகூர்ந்தபடியே எங்கள் பாதையில் போய்க்கொண்டிருப்போம். நான் பனிக்கட்டியை உடைக்க வேண்டியதாயிருந்த போதும் அதைச் செய்திருக்கிறேன். உள்ளே போகும்போது, உடைகள் என் மேல் குளிரால் உறைந்துபோனாலும், அதினால் என்னுடைய ஜீவியத்தில் ஒருபோதும் மோசமாக சளிப்பிடித் ததே கிடையாது. இந்நிலையில் எனக்கு ஞாபகம் உள்ளது, ஒரு சமயம்...இப்பொழுது, என்னுடைய மனைவியும் கூட இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிறாள், எனவே நான் அநேகமாக சபை ஆராதனைக்குப் பிறகு இதைக் கேட்பேன். இந்நிலையில் தேவைகளுக்கு போதுமான பணத்தை நாங்கள் கொண்டிருக்க இயலாத ஒரு நிலைக்கு உள்ளானோம். எனவே நான் அவளிடம், "நான் காணிக்கை எடுக்கப்போகிறேன்" என்று கூறினேன். அதற்கு அவள், நான் உங்களைக் கவனிக்கப் போகிறேன்" என்றாள். எனவே நான் கூடாரத்திற்குப் போய், "என்னால் அதைச் செய்ய முடியாது என்று நினைக்கிறாயா?" என்றேன். 6. இப்பொழுது, அவர்கள் காணிக்கை தர மாட்டார்கள் என்ற காரணத்தினால் அல்ல, அந்த அன்பான ஜனங்கள் எனக்காக தங்கள் கரத்தையும் வெட்டி எடுத்து விட விருப்பமுள்ளவர்களாய் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அதைச் செய்ய நான் விரும்பவில்லை. இந்நிலையில் வழக்கமாக தேவனுடைய காப்புக் கவசத்தை விட்டு ஊழியக்காரர்களை அகற்றிப் போடுவதற்கான அவர்களின் ஒரு பலவீனம் பணமே என்பதை நான் எப்போதுமே அறிந்திருந்தேன். எனவே "பண ஆசையே எல்லா தீமைக்கும் வேராயிருக்கிறது." ஆகவே நாங்கள் இங்கே வந்திருக்கிறோம். பிரன்ஹாம்கள் எல்லாருமே எவ்வளவு கூடுமோ அவ்வளவு நாடோடிகளாகவும், ஏழைகளாகவும் தான் இருக்கிறார்கள். அந்த மற்றவர்களைப் போலவே நானும் இருக்க விரும்புகிறேன். இங்கே சிறிது காலத்திற்கு முன்பு, (way out) கலிபோர்னியாவிலுள்ள ஒரு மனிதன் எனக்கு ஒரு காடிலாக் காரை தரப்போவதாக இருந்தார். அவருடைய மனைவி புற்று நோயிலிருந்து சுகமடைந்திருந்தாள், அவர், நல்லது, சகோதரன் பிரன்ஹாமே, நாங்கள் அவாக் அவர்களுக்கு ஒரு காடிலாக் காரைக் கொடுக்கிறோம். நாங்கள் சென்று உமக்கும் ஒன்றை வாங்குகிறோம்" என்றார். அதற்கு நான், "சகோதரனே, உமக்கு நன்றி. என்னுடைய பழைய செவர்லே மோட்டார் வாகனம் (Chevrolet truck) இன்னும் மிக நல்ல தோற்றத்தில் தான் உள்ளது" என்றேன். அவர்கள் எனக்கு ஒரு போன்டியாக் காரைக் கொடுத்திருக்கிறார்கள், நான் அப்படியே தொடர்ந்து ஒவ்வொரு முறையும் அதைக் கொடுப்பதும் வேறொன்றை வாங்குவதுமாக இருக்கிறேன், எனவே அவர்கள்... அவர், "நான்... நீர் ஒரு காடிலாக் காரை வைத்திருக்க நாங்கள் விரும்புகிறோம்" என்றார். 7. அதற்கு நான், "இப்பொழுது நான் ஒரு பெரிய காடிலாக் காரில் ஆர்கன்ஸாஸினூடாக வந்து கொண்டிருந்தால், அது எனக்கு அவ்வளவு நன்றாக இருக்காது. இங்கே என்னிடம் வருகிற எனது ஜனங்கள், அங்கே வெளியில் இருக்கும் சிறிய வயதான பெண்கள், பாதி மரித்துப்போனது போல மிகவும், முதுகு பிரச்சனைகளோடும், பெண்களுக்கான கோளாறுகளோடும். அந்த விளைநிலத்தினூடாக அவ்விதம் பருத்தியை உள்ளடக்கிய ஒரு கோணிப்பையை இழுத்தபடியும்; ஏறக்குறைய ஐம்பது. நூறு பவுண்டுகள் எடையுள்ள பருத்தியை தங்களுக்கு பின்னே இழுத்த படியும் வந்திருக்கலாம்; ஒருக்கால் காலை உணவிற்காக கொஞ்சம் தோலில்லாத உப்பிட்ட பன்றி இறைச்சியையோ (fat bacon) சோள ரொட்டியையோ சாப்பிட்டு வந்திருக்கலாம். அவர்கள் "ஓ, சகோதரன் பிரன்ஹாம் அதோ ஒரு காடிலாக் காரில் போகிறார்" என்று சொல்லும்போது, அது அது எனக்குச் சரியாகத் தோன்றவில்லை. இப்பொழுது, உங்களுக்கு ஒரு காடிலாக் கார் கிடைத்தால், அது சரிதான், புரிகிறதா (பாருங்கள்). ஆனால் நான் வெறுமனே என்னைக்குறித்து பேசிக் கொண்டிருக்கிறேன். நான் ஒரு கன்வென்ஷன் கூட்டத்திற்குச் சென்றேன், "சுகமளித்தலின் சத்தம்" என்ற கன்வென்ஷன் கூட்டங்களில் ஒன்றிற்கு போனது எனக்கு நினைவிருக்கிறது. நான் சற்றுநேரம் காரை நிறுத்தினேன். கார் வாங்குபவரின் தேவைக்கு ஏற்ப உருவாக்கப்பட்டிருந்த (custom built) ஒரு மகத்தான பெரிய பேக்கார்ட் காரில் ஒரு மனிதர் அங்கே உட்கார்ந்துக் கொண்டிருந்தார். இங்கேயோ வேறொருவர் ஒரு லிங்கன் காரோடு அமர்ந்து கொண்டிருந்தார். நானோ ஒரு பழைய 35 மாடல் ஷெவர்லே காரை வைத்திருந்தேன். அது அந்தப் பெரிய கார்களுக்கு இடையே அந்தக் கார்களைப்போன்று இல்லாத காரணத்தினால், எல்லாரும் கவ னிக்கும் ஒன்றைப்போன்று - அதைப்போன்று தோற்றமளிக்கவில்லை. ஆனால் அவர்களைக் கொண்டுபோய் சேர்த்தது போன்றே. அது என்னையும் கூட அங்கே கொண்டுபோய் சேர்த்தது. அப்படியே அதேவிதமாகவே நானும் அங்கு போய்ச்சேர்ந்தேன். ஆகவே, இந்தக் காணிக்கை எடுத்தது எனக்கு நினைவிருக்கிறது. நான் போய் வயோதிப சகோதரனாகிய வைய்ஸ்ஹார்ட் (Wiseheart) அவர்களிடம், அவருடைய ஆத்துமா ஆசீர்வதிக்கப்படுவதாக, அங்கிருந்த வயதான டீக்கனாகிய அவர் இன்றிரவு மகிமையில் இருக்கிறார். அவர் வயது முதிர்ந்தவர், நான், "நான் காணிக்கை எடுக்கப்போகிறேன். நீர் அதைச் செய்ய விரும்புகிறேன். - ஏதோ என்னிடம் உள்ளது" என்றேன். 8. எல்லாரும் என்னைப் பார்க்கத் தொடங்கினார்கள். வயோதிப சகோதரன் வைய்ஸ்ஹார்ட் அவர்கள், கூடாரத்திலுள்ள இங்கிருக்கும் உங்களில் அநேகருக்கு அவரை ஞாபகமிருக்கும். எனவே அவர் போனார்... நான், "என்னுடைய தொப்பியை வாங்கிக் கொண்டு, அதை (அவர்களிடம்) அனுப்ப (pass) விரும்புகிறேன். இ... ஏதோவொன்றாக உள்ளது என்றேன். அது வரிசையில் எல்லாரிடமும் சென்றது... அங்கே அருமை யான வயதில் மூத்த ஸ்திரீ முன்னால் அமர்ந்திருந்தார்கள். அது அநேக வருடங்களுக்கு முன்பு, அது ஒரு கடினமான காலமாக இருந்தது. ஒரு சிறு மேல் ஆடைக்கு (apron) அடியில் நீங்கள் எடுத்துச்செல்லும் இந்தச் சிறு சட்டைப்பைகளில் ஒன்றில், உங்களுக்குத் தெரியும், மேல் ஆடைக்கு அடியிலிருக்கும் பாக்கெட்டில், அவர்கள் கீழ்நோக்கியபடி வைத்திருந்தார்கள் (got down). இவ்வாறாக அவர்கள் இந்தச்சிறு பணப்பையை வெளியே எடுத்தார்கள், அதன்மேல் ஒரு சிறு கொளுவி மாட்டியை வைத்திருந்தார்கள். அவர்கள் அதை அவிழ்த்து, சில சிறு அமெரிக்க நாணயங்களை பொறுக்கி எடுக்கத் தொடங்கினார்கள். என்னே, அந்த வயதான ஏழை ஸ்திரீயின் பணத்தை என்னால் பெற்றுக்கொள்ள முடியவில்லை. நான் என்னுடைய இருதயத்தில் வைத்து அதைக்குறித்து வருத்தப்பட தொடங்கினேன். அதைக்குறித்து பாரமடைந்தேன் 'ஓ. நீங்கள் என்ன சொல்லுவீர்கள் என்று பார்க்க, நான் உங்களை சும்மா, விகடம் பண்ணினேன்" என்றேன். என்னே! அவ்விதமாக அங்கே வைத்துவிட்டு, உட்கார்ந்து, "நான் அவ்வாறு எண்ணங்கொள்ளவில்லை" என்றேன். 9. வயதான மனிதராகிய சகோதரன் ரையன், (Brother Ryan) அவர் இங்கு எங்கோயோ உட்கார்ந்துக் கொண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன். நீங்கள் வழக்க மாக அவர் இங்கே அமர்ந்திருப்பதைக் காண்பதுண்டு. அவருக்கு நீளமான தலைமுடியும் நீண்ட தாடியும் உண்டு. அவர் ஏறத்தாழ மிச்சிகனிலிருந்து வருகிறார். அவர் அங்கே ஒரு பழைய மிதிவண்டியை ஓட்டிக் கொண்டுவந்து, அதை எனக்குக் கொடுத்துவிட்டு, அதைத் திரும்ப வாங்கவில்லை, அது அவர்மேல் நழுவி விழுந்துவிட்டது. எனவே நான் அதை சற்று பழுது பார்த்து, அதற்கு வர்ணம் அடித்து, அதை எடுத்துச் சென்று ஐந்து டாலர்களுக்கு விற்றேன். அதனால் நான் காணிக்கை எடுக்க வேண்டியதாக இருக்கவில்லை. எனவே, நான்... எப்படியோ. கர்த்தர் ஒரு வழியை ஏற்படுத்தினார், அவர் அவ்வாறு செய்யவில்லையா? எனவே அவர் ஒரு வழியை ஏற்படுத்துவார். நண்பர்களே, நான் இருதயத்தின் முழு உத்தமத்தோடும் உங்களுக்கு மிகவும் நன்றி செலுத்துகிறேன். மிகவும் கனிவான கிறிஸ்தவ அன்போடு கூட, நான் -நான் உங்களுக்கு நன்றி செலுத்துகிறேன். தேவனுடைய கிருபையால், நாம் அதோ அங்கே அந்த மகத்தான நாளில் சந்திக்கும் போது, என்னால் கூடுமான மிகச்சிறந்ததை நான் செய்துள்ளதைக் கண்டு கொள்வீர்கள். கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது, நான் சில வேதவாக்கியங்களை மிகத் துரிதமாக வாசித்துவிட்டு, இங்கேயிருக்கும் தேவனுடைய வார்த்தையிலிருந்து கொஞ்சம் பேச விரும்புகிறேன். அதன்பிறகு நாம் ஜெபவரிசையைத் துவங்கப்mபோகிறோம். கர்த்தருக்குச் சித்தமானால், ஆராதனைகள் ஞாயிறு இரவு வரைக்கும் தொடர்ந்து நடக்கும் என்பது நினைவிருக்கட்டும். எனவே நாம் இந்த இரவுகளில் சிலவற்றை, ஒருவேளை இந்த வாரம் முழுவதும் இருக்கிற இரவுகளில் சிலவற்றை எடுத்துக்கொண்டு, ஒருக்கால் ஜெப வரிசையை நாம் துவங்கி, இருக்கிற அனைவருக்காகவும் ஜெபிக்கக் கூடுமா என்று பார்க்க விரும்புகிறேன்... [ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்.] 10....ஒருக்கால், ஆனால் நீங்கள் ஒரு கிறிஸ்தவராக இருந்தால், ஒரே காரியம் என்னவெனில், விசுவாச குறைபாடு மட்டும் தான், மிகச்சரியாக நீங்கள் இருக்கும் இடத்திலேயே அங்கேயே அதை விசுவாசியுங்கள். ஒரே காரணம் என்னவென்று உங்களிடம் கூறப்பட்டு விட்டது. நல்லது, அப்படியானால் நீங்கள் அப்படியே - நீங்கள் இன்னும் அற்பத்தனமாக செய்து கொண்டிருக்கிற உங்களுடைய காரியங்களை விட்டுவிடுங்கள். மற்றும் நீங்கள் செய்து கொண்டிருக்கும் இக்காரியத்தை விட்டுவிட மறுப் பீர்களானால், அது உங்களுக்கு எந்த நன்மையையும் செய்யாது. பாருங்கள்? எனவே சுகமளித்தல் என்பது எப்போதுமே கிறிஸ்துவிலுள்ள உங்கள் விசுவாசமாக உள்ளது. இப்பொழுது, பரிசுத்த லூக்கா 5-வது அதிகாரத்திலுள்ள இந்த வசனங்களை நான் வாசிக்கிறேன். பின்பு அவர் கெனேசரேத்துக் கடலருகே நின்ற போது, திரளான ஜனங்கள் தேவவசனத்தைக் கேட்கும்படி... (எனக்கு அது பிடிக்கும்)... அவரிடத்தில் நெருங்கினார்கள். அப்பொழுது கடற்கரையிலே நின்ற இரண்டு படவுகளைக் கண்டார். மீன்பிடிக்கிறவர்கள் அவைகளை விட்டிறங்கி, வலைகளை அலசிக்கொண்டிருந் தார்கள். அப்பொழுது அந்தப் படவுகளில் ஒன்றில் ஏறினார், அது சீமோனுடையதாயிருந்தது; அதைக் கரையிலிருந்து சற்றே தள்ளும்படி அவனைக் கேட்டுக் கொண்டு, அந்தப் படவில் உட்கார்ந்து, ஜனங்க ளுக்குப் போதகம்பண்ணினார். அவர் போதகம்பண்ணி முடித்தபின்பு சீமோனை நோக்கி: ஆழத்திலே தள்ளிக் கொண்டுபோய், மீன்பிடிக்கும்படி உங்கள் வலைகளைப் போடுங்கள் என்றார். அதற்குச் சீமோன்: ஐயரே, இராமுழுவதும் நாங் கள் பிரயாசப்பட்டும் ஒன்றும் அகப்படவில்லை; ஆகிலும் உம்முடைய வார்த்தையின்படியே வலையைப் போடுகிறேன் என்றான். அந்தப்படியே அவர்கள் செய்து, தங்கள் வலை கிழிந்து போகத்தக்கதாக மிகுதியான மீன்களைப் பிடித்தார்கள். அப்பொழுது மற்றப் படவிலிருந்த கூட்டாளிகள் வந்து தங்களுக்கு உதவிசெய்யும்படிக்குச் சைகை காட்டினார்கள்; அவர்கள் வந்து, இரண்டு படவுகளும் அமிழத்தக்கதாக நிரப்பினார்கள். சீமோன் பேதுரு அதைக்கண்டு, இயேசுவின் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நான் பாவியான மனுஷன், நீர் என்னை விட்டுப்போகவேண்டும் என்றான். அவர்கள் திரளான மீன்களைப் பிடித்ததினிமித் தம், அவனுக்கும் அவனோடுகூட இருந்த யாவருக்கும் பிரமிப்புண்டானபடியினால் அப்படிச் சொன்னான். சீமோனுக்குக் கூட்டாளிகளான செபெதேயுவின் குமாரராகிய யாக்கோபும் யோவானும் அந்தப்படியே பிரமித்தார்கள். அப்பொழுது இயேசு சீமோனை நோக்கி: பயப்படாதே, இதுமுதல் நீ மனுஷரைப் பிடிக்கிறவனாயிருப்பாய் என்றார். அவர்கள் படவுகளைக் கரையிலே கொண்டு போய் நிறுத்தி, எல்லாவற்றையும் விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள். 11. இப்பொழுது, ஒரு சிறு ஜெப வார்த்தைக்காக சற்றுநேரம் நம்முடைய தலைகளைத் தாழ்த்துவோம். எங்கள் பரலோகப் பிதாவே, ஒரு புதுவாரத்தின் ஆரம்பம், புதிய காரியங்கள் முன்னால் உள்ளன... நீர் எங்களுக்காக செய்துள்ள அநேக அடையாளங்களும், அற்புதங்களுமாக, சரித்திரத்திலே ஒரு வாரம். நாங்கள் நன்றியுள்ளவர் களாயிருக்கிறோம். இப்பொழுதும், பிதாவே, வரவிருக்கிற இந்த வாரம் முழுவதும் நீர் எங்களுக்கு ஒத்தாசை புரிய வேண்டுமென்று ஜெபிக்கி றோம். தேவனுடைய மகிமைக்காக மாத்திரம் அது மிகவும் அதிகமாகவும், அநேக மடங்கு மிகுதியாகவும் இருப்பதாக.. இதை அருளும், பிதாவே. அநேக வியாதியஸ்தர்கள் சுகமடைவார்களாக. பின்வாங்கிப் போனவர்கள் பழைய நிலைக்குக் கொண்டு வரப்படுவார்களாக, பாவிகள் தேவனுடைய இராஜ்ஜியத் திற்குள் பிறப்பார்களாக. கர்த்தாவே, ஆயிரக்கணக்கான ஆத்துமாக்களும் தேவையுள்ள வர்களும் தங்கள் ஆத்தும இரட்சிப்பிற்காக கிறிஸ்துவிடம் வரவும், தங்க ளுடைய வியாதிப்பட்ட சரீரங்கள் சுகமடையவும் ஏதுவான ஒரு பழமை பாணியிலுள்ள எழுப்புதல் இங்கே இந்த தேசம் முழுவதும் வருவதாக. நாங்கள் இதை உமது நேச குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம். ஆமென். இப்பொழுது, சற்றுநேரத்திற்கு, ஒரு தலைப்பு என்று நான் அழைப்பதை எடுக்க விரும்புகிறேனென்றால், அது, "உம்முடைய வார்த்தையின் படியே" என்பதாகும். வார்த்தையை வாசிக்க எனக்குப் பிடிக்கும். அது ஒரு, ஆவியின் ஏவுதலாக (inspiration) உள்ளது. "விசுவாசம் கேட்பதினால், தேவனுடைய வார்த்தையைக் கேட்பதினால் வருகிறது" என்று வேதாகமம் கூறுகிறது. அது உண்மை. நாம் தேவனுடைய வார்த்தையைக் கேட்கும் போது, பிறகு விசுவாசம் உண்டாகிறது. 12. நான் அதைப் பார்த்துக்கொண்டு ஆராய்கையில், இன்றிரவு இதில் கவனம் செலுத்த விரும்புகிறேன்- அது ஒருக்கால் திங்கட்கிழமையாக இருக்கலாம். திங்கட்கிழமையில், ஒருக்கால் ஞாயிற்றுக்கிழமையில் எல்லாரும் மகத்தானதொரு பிரசங்கத்தையும் உபதேசத்தையும் கேட்டு, அவர் தொடர்ந்து போய்க் கொண்டிருந்தாலும், கடற்கரைக்கு அருகே கூடுவதைத் தவிர ஒதுக்கிக் கொடுக்கப்பட்ட எந்த இடங்களும் அவருக்கு இல்லாதிருந்தது. அவர் வழக்கமாக பணக்காரர்களை விட்டும், அநேக உலகப் பொருட்களை உடையவர்களாயிருந்த ஜனங்களை விட்டும் விலகியிருக்க வேண்டியதாயிருந்தது, எனவே அவர் மீனவர்கள் மத்தியிலும், விவசாயிகள் மத்தியிலும், கீழ்மட்டத்திலுள்ள வகையினர் என்று கருதப்பட்ட அந்தக் கீழ்மட்டவகை ஜனங்கள் மத்தியிலும், இவ்வுலகத்தின் ஆஸ்திகள் அதிகம் இல்லாமல் இருந்தாலும், விசுவாசத்தில் ஐசுவரியமுள்ளவர் களாயிருந்த ஜனங்கள் மத்தியிலும் தாழ்த்திக் கொண்டார். நானும் அவ்விதம் இருப்பதையே பெரிதும் விரும்பியிருப்பேன். எனவே அங்கு தான், அவரை விசுவாசித்த ஜனங்கள் இருந்த இடத்தில் தான், அவன் அவரைக் கண்டு பிடித்தான். இன்றிரவு நீங்களும் அவரை அங்குதான் கண்டுகொள்வீர்கள். அங்குதான் ஜனங்கள் அவரை விசுவாசிக்கிறார்கள். அங்குதான் அவர் இருப்பார். அவர் எப்போதுமே அங்கு தான் இருக்கிறார், அவர்-நீங்களும் கூட, வழக்கமாக, வரவேற்கப்படுகிறதும் அங்குதான். இப்பொழுது, அதன்பிறகு அவர் அங்கே கூடி வருகையில், நாம் அவரைக்குறித்து சிந்தித்துப் பார்ப்போம்: அவரைப் பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்த சில மனிதர்களோடு அவர் நெடுக வந்து, கரைக்கு பக்கத்தில் நிற்பதை என்னால் காண முடிகிறது. மேலும் அவர் கரையின் பக்கவாட்டில் நின்றுவிட்டார். அவர்- அவர் இந்தப் பிரசங்கத்தைப் பண்ணின சரியான இடமானது, இன்றைய நவீன நாட்களில் இருக்கிற விதமான, ஒரு படம் என்னிடமுள்ளது. அங்கே இன்னுமாக சிறு துறைமுக படகுகள் உள்ளன. அங்கே அவர்கள் அந்தப் படகுகளை உள்ளே இழுக்கிறார்கள். கர்த்தருக்குச் சித்தமானால், அடுத்த சில வாரங்களில் நான் அங்கே ஒரு சுகமளிக்கிற ஆராதனையை நடத்துவேன் என்று நம்புகிறேன். 13. இப்பொழுது, அவர் - அவர் பேசத் துவங்குகிறார், அப்பொழுது மேலே மலைப்பகுதிகள் நெடுகிலுமிருந்த பெண்களையும், வெளியில் தங்கள் எருதுகளைக்கொண்டு வயலில் உழுதுகொண்டும் அதைப் போன்ற மற்றவைகளைச் செய்து கொண்டுமிருந்த மனி தர்களையும் என்னால் காண முடிகிறது. அப்பொழுது தான் உலகத்தின் வெளிச்சத்திற்குள்ளாக வந்திருந்த அந்த கீர்த்திவாய்ந்த பிரசங்கியார் அங்கே கடலின் அருகில் பிரசங்கம் பண்ணிக்கொண்டிருக்கிறார் என்று அவர்கள் கேள்விப்பட்டார்கள். அவர்கள் தேவனுடைய வார்த்தையைக் கேட்கும்படியாக தாங்கள் துணிதுவைப்பதை விட்டுவிட்டு போவதையும், எருதுகளை நிறுத்தி, அவைகளை கட்டிவிட்டுப் போவதையும் என்னால் காண முடிகிறது. ஓ, அவர் பிரசங்கம் பண்ணுவதைக் கேட்பதை நான் நிச்சயமாக விரும்பியிருப்பேன், நீங்களும் விரும்பியிருக்க மாட்டீர்களா? நான் விரும்புகிற ஏதாகிலும் ஒன்று இருக்கும் என்றால், நல்ல பிரசங்கத்தைக் கேட்பது தான், ஒரு மனிதன் பிரசங்கம் பண்ணுவதைக் கேட்பது தான். நான் என்னுடைய ஜீவியத்தில் எப்பொழுதாகிலும் கேட்ட பிரசங்கங்கள் எல்லாம் இருந்த போதிலும், அவர் அங்கே நின்றுகொண்டு, "வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" என்று சொன்ன போது, அவர் கூறுவதைக் கேட்க நான் ஜீவித்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நீங்கள் அதைக் கேட்க விரும்பியிருக்க மாட்டீர்களா? நாம் ஒருபோதும் அதைக் கேட்க முடியாது என்று யூகிக்கிறேன். ஆனால் இங்கே ஒரு விஷயம் உள்ளது. நாம் நேர்மையாக இருந்தால் நாம் கேட்போம். "ஆசீர்வதிக்கப்பட்டவனே, உலகத் தோற்றமுதல் உனக்காக ஆயத்தம் பண்ணப்பட்ட உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி." கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின் மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்; 14. அந்த இரவைக்குறித்து சிந்திக்கும்போது, அது என்னவொரு அற்புதமான நேரமாக இருக்கும்! யுத்தங்கள் எல்லாம் முடிந்து, நாம் அந்த மகத்தான கலியாண விருந்தில் சுற்றிலும் உட்கார்ந்து இருக்கும்போது, அது அற்புதமாக இருக்காதா? நான் மேஜையின் மறுபக்கம் அல்லது குறுக்கே நோக்கும்போது, அங்கே சகோதரன் வில்லட்ஸ் அவர்கள் அந்த பக்கம் உட்கார்ந்து இருப்பதைக் காண நேரிடும். இங்கே... வெவ்வேறானவர்களை நோக்கிப்பார்ப்பது? "நல்லது. அவர்கள் கானர்ஸ்வில் கூட்டத்தில் இருந்தார்கள்." நாம் வெறுமனே சற்றே சிறிது அழ வேண்டும் என்று நான்-நான் கனிவாய் நம்புகிறேன். நீங்கள் அவ்வாறு நினைக்கவில்லையா? நான் மேஜையின் மறுபக்கத்தை அடைந்து அதைக் காணும்போது, அங்கே அதனூடாக இருக்கும் யாவரும். யுத்தத்தினால் ஏற்பட்ட தழும்புகளை உடைய பழங்கால அனுபவம் மிகுந்த படைத்துறை வீரர்களும், ஒருவர் மற்றவரின் கரங்களைப் பற்றிப்பிடித்தவர்களாய், மேஜை யின் குறுக்கே தலைகளை தாழ்த்தி ஆனந்த கண்ணீர் வடிக்கும்போது. அது அற்புதமாக இருக்காதா? மிருதுவாகவும், தெளிவாகவுமுள்ள நீடித்த மெல்லொலி எழுப்பி, அறிவிப்பு எக்காளங்கள் முழங்குவதை என்னால் கேட்க முடிகிறது, அப்பொழுது இராஜா தம்முடைய அழகோடு வெளியே வர. அவருடைய கம்பீரமான நீள அங்கி அவரைச் சுற்றிலும் இருக்க, மேஜை நெடுக நடந்துவந்து, தமது சொந்த கரங்களை எடுத்து நமது கண்களிலிருந்து வரும் கண்ணீரைத் துடைத்து, "இப்பொழுது அழவேண்டாம், அதெல்லாம் முடிந்து விட்டது" என்று கூறுவார். ஆமென். அந்த நாளுக்காகத் தான் நான் ஜீவித்துக்கொண்டிருக்கிறேன். அந்தக் காரணத்தினால் தான் இழக்கப்பட்ட ஆத்துமாக்களின் நிமித்தமாக வற்புறுத்திக்கொண்டும், கெஞ்சிக்கொண்டும், மன்றாடிக் கொண்டும், அவர்களை கர்த்தராகிய இயேசுவிடம் கொண்டுவர எனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் செய்துகொண்டும் இருக்கிறேன். பிறகு நான் அவருடைய பாதங்களண்டையில் அமர்ந்து இந்த ஜனங்கள் அவர் சொல்லுவதைக் கேட்பது போன்று அவர் கூறுவதைக் கேட்க விரும்புகிறேன். அவர் பிரசங்கம் பண்ணத்தொடங்கினார், ஜனங்கள் விசுவாசிக்கத் துவங்கி, பெருந்திரள் கூட்டமான ஜனங்கள் அந்த குன்றுகளின் குறுக்காக இறங்கிவர ஆரம்பித் தார்கள். அற்புதங்களை நடப்பித்து, அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்து கொண்டு, காரியங்கள் சம்பவிக்கும் முன்பே அவைகளை அறிந்துகொள்ளும் இந்தப் புதிய மனிதர்... அது என்னவொரு அதிசய சம்பவம்! அவர்கள் யாவரும் அவர் பேசுவதைக் கேட்க இறங்கி வந்து, அவரை நோக்கி நெருக்கியடித்துக் கொண்டு, அவர் பக்கமாக வரத் தொடங்குகிறார்கள். 15. இப்பொழுது, சற்றுநேரம் நமது சிந்தையில் உள்ள கேமராவை மாற்றி, அந்தக் கடற்கரையின் ஓரமாய் நெடுக, அதோ ஒரு கட்டையின் மேல், அல்லது ஒரு பழைய கெட்டியான மரக்கட்டையின் மேல் உட்கார்ந்து இருப்பதை (setting up) பார்ப்போம்; அங்கே பேதுருவும், செபதேயுவின் குமாரர்களாகிய யாக்கோபும். யோவானும் உட்கார்ந்து இருப்பதை (setting up) நான் காண்கிறேன், அவர்கள் இராமுழுவதும் மீன்பிடித்தும் சோர்ந்து போனவர்களாக அங்கே உட்கார்ந்து இருந் தார்கள் (settingup). இராமுழுவதும் மீன்பிடித்தும் ஒன்றும் கிடைக்காமல் இருக்கும்போது, அது எப்படியிருக்கும் என்று மீன்பிடிப்பவர்களாகிய உங்களில் எவருக்கும் தெரியும். அது மிகவும் ஊக்கமிழக்கும்படி செய்வதாயிருக்கும். அவ்வண்ணமாக அவர்கள் தங்கள் வலைகளை அலசி அவைகளை காயும்படி தொங்கவிட்டுவிட்டு, அங்கே ஒரு அடிமரக்கட்டையின் மேல் உட்கார்ந்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் சிலர், "நல்லது, இதோ அந்த மனிதர், அந்தப் பிரசங்கியார் வருகிறார்; அவர் என்ன சொல்லப்போகிறார் என்று பார்ப்போம்" என்றார்கள். அந்த வயதான அப்போஸ்தலன் கெட்டியான மரக்கட்டையை எடுத்து உட்கார்ந்துகொள்வதை என்னால் காண முடிகிறது. சிறிது நேரம் கழித்து அவன் உற்றுக் கேட்கத் தொடங்கி, இந்த மனிதரைக் குறித்து சற்று வித்தியாசமான ஏதோவொன்றுள்ளதே" என்று சொல்லிய வாறு, தன்னுடைய மரக்கட்டையை சற்றே நெருக்கமாக நகர்த்துகிறான். சிறிது கழித்து, அவன் சரியாக அவருக்கு முன்னால் நின்று அவரை நோக்கி மனிதர்களை இழுக்கும்படியாக அவரைக்குறித்து ஏதோவொன்றுள்ளது. அவர் இன்னும் அதே வல்லமையை பெற்றிருக்கிறார். "நான் உயர்த்தப்பட்டிருக்கும்போது, எல்லா மனிதரையும் என்னிடத்தில் இழுத்துக் கொள்ளுவேன்" என்று கூறி யுள்ளார். 16. சுவிசேஷமானது எவ்வளவு எளிமையாக இருந்தாலும் அது ஒரு பொருட்டேயல்ல, கிறிஸ்து அதில் இருப்பாரானால், அது ஜனங்களை இழுத்துக்கொள்ளும். நாம் இந்தப் பிற்பகல் வேளையில் பேசினபடி, அவர் உலகம் எப்பொழுதும் அறிந்ததிலேயே மிக மகத்தான காந்தமாக இருக்கிறார்: "எல்லா மனிதரையும் என்னிடத்தில் இழுத்துக் கொள்ளுவேன்" என்று கூறியுள்ளார். அதன்பிறகு கூட்டம் அதிகமானபோது, அவர் சுற்றும் முற்றும் பார்ப்பதை நான் காண்கிறேன் - அந்தப் படகு அங்கேயிருப்பதை அவர் அறிந்திருந்தார் என்று நான் நம்புகிறேன். எனவே அவர் அந்தப் படகிற்குள் அடியெடுத்து வைத்து, "பேதுருவே, சற்று வெளிப்புறமாக தள்ளு: நான் சிறிதுநேரம் பிரசங்கம்பண்ண விரும்புகிறேன்" என்றார். பிறகு அவர் அங்கே நின்று கொண்டு ஜனங்களுக்கு பிரசங்கிக்கத் துவங்குகையில், நல்லது, பிற்பாடு அவர் அதை முடித்தபிறகு, அவர் சீமோனின் படகை இரவலாக வாங்கியிருந்தார், அவர் கிரயம் செலுத்தாமல் எதையும் ஒருபோதும் இரவலாக வாங்கியதே கிடையாது. அவர், "இப்பொழுது, சீமோனே, நீ ஆழத்திற்குள் தள்ளிக்கொண்டு போக (launch out) நான் விரும்புகிறேன்" என்றார். ஓ. நான் - சற்றுநேரம், "செயல்படுத்து" அல்லது "துவக்கு" (Launch out) என்பதின் பேரில் பேச விரும்புகிறேன். இன்றிரவு ஜனங்களின் விசுவாசத்தோடுள்ள பிரச்சனையும் அதுதான்: அதைக் கட்டவிழ்த்து விட நீங்கள் பயப்படுகிறீர்கள். உங்களில் அநேகருக்கு விசுவாசம் உண்டு, ஆனால் அதைக் கட்டவிழ்த்துவிட பயப்படுகிறீர்கள். ஆவியில்லாத சரீரம் செத்ததாக இருப்பதுபோன்று, கிரியைகள் இல்லாத உங்கள் விசுவாசமும் செத்ததாயிருக்கிறது. புரிகிறதா? உங்களுக்கு விசுவாசம் இருந்தால், உங்கள் கிரியைகள் மூலமாக உங்களுடைய விசுவாசத்தை எனக்குக் காண்பியுங்கள். 17. இப்பொழுது, பாருங்கள், பவுல் விசுவாசத்தின் மூலம் ஆபிரகாமை நீதிமான் என நியாயப்படுத்துகிறான். யாக்கோபோ அவனை கிரியைகள் மூலமாக நீதிமான் என்று நியாயப்படுத்தினான். ஆபிரகாம் விசுவாசத்தினால் நீதிமானாக்கப்பட்டான் என்று பவுல் ரோமர் 4-வது அதிகாரத்தில் கூறுகிறான். இந்நிலையில் யாக்கோபு வந்து அவன் கிரியைகளின் மூலமாக நீதிமானாக்கப்பட்டான் என்று கூறுகிறான். இப்பொழுது, அவர்கள் இருவருமே, ஒருவர் மற்றவரை உறுதிப்படுத்தினார்கள். இப்பொழுது, தேவன் எதைக் கண்டார்? அவனுடைய விசுவாசத்தைக் கண்டார் என்று என்று பவுல் பேசிக் கொண்டிருக்கிறான். யாக்கோபிடம் மனிதன் எதைக் கண்டான்? அவனுடைய கிரியைகளைக் கண்டான் என்று பேசிக் கொண்டிருக் கிறான். நீங்கள், "தேவனிடம் எனக்கு விசுவாசமுண்டு' என்று கூறி, உங்கள் விசுவாசத்தை உபயோகிக்க பயப்படுவீர்களானால், அது உங்களுக்கு எந்த நன்மையும் செய்யாது. நீங்கள் அதைச் செய்ய துவங்க வேண்டும் (You've got to launch out). இன்று இந்த உலகத்திலுள்ள ஜனங்களோடுள்ள காரியமும் அதுதான், அவர்களில் அநேகருக்கு விசுவாசம் உண்டு, ஆனால் அதைக்கொண்டு செயல்படுத்த அவர்கள் பயப்படுகிறார்கள். நீங்கள் துணிந்து செயலில் இறங்க சற்றே பயப்படுகிறீர்கள். அப்படியே, "நல்லது, என்னால் முடியும். என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய என்னால் முடியும்" என்று கூறுங்கள். ஆமென். "மீன்பிடிக்கும்படி வலைகளை வீசிப் போடுங்கள்" என்று சொன்ன அவரை நோக்கிப் பாருங்கள். 18. வேறு வார்த்தைகளில் சொன்னால், பேதுரு, "நல்லது, ஆண்டவரே, ஏன், நாங்கள் மீன்பிடிப்பவர்கள். ஏன், நாங்கள்-நாங்கள் இங்கே இந்தக் கடலிலேயே பிறந்து வளர்ந்தோம். ஏன், சந்திரன் எப்போது சரியாக இருக்குமென்றும், எப்போது அடையாளங்கள் எல்லாம் சரியாக இருக்கும் என்றும் நாங்கள் அறிந்திருக்கிறோம். அந்தத் தண்ணீரில் ஒரு மீன் கூட இல்லை. நல்லது, நாங்கள் இராமுழுவதும் கஷ்டப்பட்டு உழைத்து விட்டோம். அடையாளங்கள் எப்போதும் சரியாக இருக்கும் என்று எங்களுக்குத் தெரியும், நாங்களோ ஒரு மீன் கூட பிடிக்கவேயில்லை. எங்களுக்கு ஒன்றும் அகப்படவில்லை. அதன்பின் நீர் வந்து நான் வலைவீசி மீன்பிடித்துக் கொண்டிருந்த அதே தண்ணீரில் திரும்பிச்செல்ல என்னிடம் சொல்லுகிறீரா? வலைகளைப் போட்டு படகு முழுவதும் நிறையும்படி அவைகள் கிடைக்குமா? ஏன், அது நடக்கவே நடக்காது" என்று கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. அவன் அவ்வாறு சொல்லியிருந்தால், அவனுக்கு அவைகள் (மீன்கள்) கிடைத்திருக்கவே கிடைத்திருக்காது. ஆனால் அவனோ, "ஆண்டவரே. நான் இராமுழுவதும் பிரயாசப்பட்டும். ஒன்றும் அகப்படவில்லை: ஆகிலும், உம்முடைய வார்த்தையின்படியே நான் வலையைப்போடப் போகிறேன்" என்றான். அங்கேதான் நீங்கள் இருக்கிறீர்கள். அங்கேதான் இரகசியம் உள்ளது: தேவனை அவருடைய வார்த்தையின்படி ஏற்றுக்கொள்ளுதல். அங்கே மீன் எதுவும் இல்லாமல் இருந்திருந்தாலும், அங்கே மீனை வைக்க தேவனால் கூடும். அவர் அதைச் செய்தார். அதே வலை இராமுழுவதும் அந்தத் தண்ணீரில் முற்றும் முழுக்க தேடியும், எதையும் பிடிக்கவில்லை. ஆனால் பாருங்கள் தேவன் அங்கே "அதைப் போடுங்கள்" என்று சொன்னபோது... 19. நல்லது, நீங்களும் இன்றிரவு ஒருக்கால் தேசத்திலுள்ள ஒவ்வொரு மருத்துவர்களின் அலுவலகத்தினூடாக வலையை வீசி பார்த்தி ருக்கலாம். ஒருக்கால் நீங்கள் சுகமளிக்கிற கூட்டங்களுக்குச் சென்று அநேக நேரங்களில் அபிஷேகிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இன்றிரவில், "ஆண்டவரே, உம்முடைய வார்த்தையின் படியே, இதோ நான் வருகிறேன்." அந்தவிதமாகத்தான் அது இருக்கிறது. ஆண்டவரே, உம்முடைய வார்த்தையின்படியே, வலையைப் போடப்போகிறேன். ஏனென்றால் நான் உம்முடைய நாமத்தில் எதைக் கேட்டாலும், நீர் அதைச் செய்வீரென்று என்னிடம் சொல்லியிருக்கிறீர். அது சத்தியம் என்று நான் விசுவாசித்து, சரியாக இப்பொழுதே உமது கட்டளையின்படியே வலையைப் போடுகிறேன்." பயப்படாதீர்கள்; மிகுதியாகக் கேளுங்கள். நீங்கள் வேண்டிக் கொள்ளாததினால் உங்களுக்கு கிடைக்கவில்லை. நீங்கள் விசுவாசிக் காததினால் நீங்கள் வேண்டிக்கொள்வதில்லை. அது சரியே. "கேளுங்கள், அப்பொழுது நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள்; தேடுங்கள், கண்டடைவீர்கள்; தட்டுங்கள். அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும். அது தேவனுடைய வார்த்தையாக உள்ளது. இப்பொழுது, நாம் மீன்பிடிக்கும்படி வலைகளைப் போடுவோம். அந்த வயதான அப்போஸ்தலன் அந்தப் பெரிய மீன்பிடிவலையை தண்ணீரில் விட்டவாறு ஆயத்தமாக்குவதை என்னால் காண முடிகிறது. பிறகு அவன் வலையை இழுக்கத் துவங்கி, இருமுறை இழுத்துப்பார்த்தபோது, அங்கே எதுவும் இல்லாதிருந்தது. சற்று நேரம் கழித்து ஏதோ பலமாக இழுக்கவும், பற்றிப்பிடிக்கவும் துவங்கினது. அப்படியே ஒருமுறை போட்டு அதை முயற்சிசெய்து பாருங்கள். அந்தச் சிறிய முயற்சியில் நீங்கள் அதிகம் உணராமல் போகலாம். இரண்டாவது சிறு முயற்சியிலும் நீங்கள் உணராதிருக்கலாம். அநேக முயற்சிகள் ஆகலாம். ஆனால் சற்று நேரம் கழித்து, ஒரு பலமான இழுப்பை நீங்கள் உணருவீர்கள். ஏதோவொன்று திடீரென பற்றிப் பிடித்துக்கொண்டது. கயிற்றின் மறு முனையில் ஏதோவொன்றுள்ளது. 20. கண்ணாடி குடுவையில் (பாட்டிலில்) மின்சாரத்தைப் பிடித்துக் கொண்ட அந்தச் சிறு பையனைப் போன்று. அவன், "எனக்குக் கிடைத்து விட்டது. எனக்குக் கிடைத்துவிட்டது" என்றான். அவனுக்கு என்ன கிடைத்தது என்பது அவனுக்குத் தெரியாதிருந்தது, ஆனால் அவனிடம் ஏதோவொன்று இருந்தது. தேவனை விசுவாசியுங்கள்: அவரை அவர் வார்த்தையின்படி ஏற்றுக்கொள்ளுங்கள். "ஆண்டவரே, உம்முடைய வார்த்தையின்படியே, நான் வலையைப் போடுகிறேன். அதைத்தான் அவன் செய்து திரளான மீன்களைப் பிடித்தான். அவிசுவாசம், முதலாவது காரியம் என்னவென்றால் அவன், "வலையை கீழே போட்டு, மீன்பிடிக்க தொடங்குகிறேன்" என்று சொன்னபோது, அதைப் பிடித்திருப்பான். மாம்சசிந்தை எவ்வளவு முட்டாள்தனமாக உள்ளது. "நல்லது," அவர்கள், "அங்கே மீன் எதுவும் இல்லை" என்றார்கள். ஆனால் தேவன் தம்முடைய வார்த்தையின் நிமித்தமாக அங்கே மீனை வைத்திருந்தார், ஏனென்றால் "மீன்பிடிக்கும்படி வலையைப் போட்டு இழுங்கள்" என்று அவர் ஏற்கனவே சொல்லியிருந்தார், கிரியை செய்ய அங்கே எதுவும் இல்லை என்றாலும், தேவன் அவ்வாறு சொல்லியிருந்தால், கிரியை செய்ய அவர் ஏதோவொன்றை அங்கே வைப்பார். நீங்கள் அவரை விசுவாசித்தால், அவரை அவர் வார்த்தையின்படி ஏற்றுக் கொள்ளுங்கள். 21. மேலும் இப்பொழுது, வேறொரு காரியம் என்னவென்றால், அவர்கள் இராமுழுவதும் வலைவீசிப் பார்த்தும், எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் ஒருமுறை அதற்காக தேவனுடைய வார்த்தையை எடுத்துக்கொண்ட போதோ, அவர்களுக்கு மீன்கள் யாவும் கிடைத்து. அவர்களுடைய படகுகள் மூழ்கவும் கூட ஆரம்பித்தது. மனிதர்களின் கடைசி முடிவு தான் தேவனுக்கு ஏற்ற தருணமாக உள்ளது. நீங்கள் உங்களால் கூடுமான வரை சென்று, மருத்துவர் உங்களுக்காக தம்மால் கூடுமான எல்லாவற்றையும் செய்யும்போது, அதுதான் - தேவன் உங்களிடம் பேசக்கூடிய நேரம். தேவனைத் தவிர நீங்கள் சார்ந்திருக்கத்தக்கதாக ஏதோவொன்றை பெற்றிருக்கும் போது, நீங்கள் அதைச் செய்வீர்கள். அது கடைசி தருணத்திற்கு வரும்போது, அப்போது - அப்போதுதான் ஒரு நபருடைய ஆத்துமாவைக் குறித்து உங்களால் அவர்களிடம் பேச முடியும். சமீபத்தில் இங்கே ஒரு மனிதரை எனக்குத் தெரியும், என்னால் அவரிடம் பேசவே முடியாதிருந்தது. நான் சொல்லும்போது - அவர் கூட்டத்தைக் குறித்து ஏளனம் செய்வார். அவர், "ஓ. பில்லிக்கு பைத்தியம் பிடித்துவிட்டது" என்றார். அப்படியே தொடர்ந்து, எல்லா வித காரியங்களையும் சொல்லிக்கொண்டிருந்தார். அவர் ஒரு மருத்துவராகவும் கூட இருந்தார், மருத்துவமனையில் ஒரு பயிற்சி மருத்துவராக இருந்தார். 22. அதன்பிறகு, அன்றொரு இரவில், ஏறக்குறைய ஒருசில வாரங்களுக்கு முன்பு, ஒரு அவசர அழைப்பின் பேரில் நான் அங்கு போயிருந்தேன். அவர் என்னை அறைக்கு அழைத்து, "சகோதரன் பிரன்ஹாமே" என்றார். அப்போது சற்று வித்தியாசமாக இருந்தது. அவர், அவர்கள் என்னுடைய கையை அகற்றப் போகிறார்களாம். எனக்கு ஐந்து பிள்ளைகள் இருக்கிறார்கள், நான் என்ன செய்வேன்" என்றார். 'நல்லது, நான், 'எனக்குத் தெரியவில்லை' என்றேன். அவர், "சகோதரன் பிரன்ஹாமே, இங்கேயுள்ள எங்கள் செவிலியர்களில் ஒருத்தியை எனக்குத் தெரியும்: காலில் கோளாறைக் கொண்டிருந்த அவளுக்கு நாங்கள் ஏறக்குறைய மூன்று வருடங்களாக சிகிச்சை அளித்தோம். இப்பொழுது, அவள் ஒருமுறை அங்கே சென்றபோது, ஜெபம் ஏறெடுக்கப்பட்டு, அவள் இயல்பாகவும் நலமாக வும் இருக்கிறாள்" என்றார். அதற்கு, "எனக்கு அவளைத் தெரியும், அது மார்கி மோர்கன் (Margie Morgan)" என்றேன். "சகோதரன் பிரன்ஹாமே. தேவன் எனக்கு உதவி செய்வார் என்று நீர் நினைக்கிறீரா?" என்று கேட்டார். அதற்கு நான், "நீர் உமது மனப்பான்மையை மாற்றிக்கொண்டு அவரை விசுவாசிப்பீரானால்" என்றேன். 23. நான் இங்கே வருவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பு, அந்த மருத்துவர், அந்த மனிதனின் கையில் அறுவை சிகிச்சை செய்வதற்கு அவசியமேயில்லை" என்று அவர்கள் என்னிடம் கூறினார்கள். தேவன் அவரைச் சுகப்படுத்தியிருந்தார். தேவனை அவருடைய வார்த்தையின் படி ஏற்றுக்கொள்ளும்போது, தேவனால் செய்யக்கூடும், அவர் தம்முடைய வார்த்தையைக் காத்துக்கொள்வார். இரகசியம் என்னவென்றால், நீங்கள் அதை விசுவாசித்தால், அவரை அவருடைய வார்த்தையின்படி ஏற்றுக்கொள்ளுங்கள். எப்பொழுதும் முயன்று வெற்றிகண்ட ஒவ்வொரு மனிதனும், தேவனை அவருடைய வார்த்தையின்படி ஏற்றுக்கொண்ட ஜனங்களாகத்தான் இருந்திருக் கிறார்கள். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? அங்கே முன்பு ஒரு சமயம் மோசே, அவன் எப்போது, எப்படி, எகிப்திற்குப் போய், அங்கு படையெடுப்பு நடத்த முடியும்? அவன் அங்கு வெளியே வனாந்தரத்தில் நின்றுகொண்டு, அவன், "ஆண்டவரே, நான் மந்த நாவுள்ளவன்" என்றான். அவன் திக்கு வாயை உடையவனாயிருந்தான். அவன், "என்னால் பேச முடியாது" என்றான். அவன் எல்லாவித சாக்குப்போக்குகளையும் சொல்லத் தொடங்கினான். ஆனால் தேவன் அவனிடம் பேசி புரியவைத்து தம்முடைய மகிமையை அவனுக்கு காண்பித்த போது, தேவனுடைய வார்த்தையின்படியே, அவன் எகிப்திற்கு புறப்பட்டுச் சென்றான். 24. உங்களால் கற்பனைசெய்து பார்க்க முடிகிறதா? -அந்நாளில் அது விநோதமாக தோன்றும் ஒரு காட்சியாக இருந்திருக்காதா? ஒரு மனிதன், எண்பது வயதுடைய ஒரு வயதான மனிதன், தேவனை அவருடைய வார்த்தையின்படி எடுக்கிறான்... இப்பொழுது, நீங்கள் சந்தேகிக்கும்படியான ஏதோவொன்று இங்கு உள்ளது. அந்த மனிதனுக்கு எண்பது வயதாக இருந்தது, வெண் தாடி கீழே தொங்கிக் கொண்டிருக்க, நீண்ட வெண்மயிர் அவனுக்குப் பின்னால் தொங்க, சிறிய வயதான எலும்பும் தோலுமான சரீரத்தை உடைய, என்பது வயதான ஒரு மனிதன். இதோ அவன் தன்னுடைய கரத்தில் ஒரு கோணலான கோலை வைத்துக்கொண்டு அந்த வனாந்தரத்தின் குறுக்காக வந்துகொண்டிருக்கிறான், மனைவியோ சிறு வயதுள்ள கோவேறு கழுதையில் கால்பரப்பியவாறு, ஒவ்வொரு இடுப்பிலும் ஒரு குழந்தையோடு கூட உட்கார்ந்திருந்தபோது, "மோசே, எங்கே போய்க் கொண்டிருக்கிறீர்?" "எகிப்தை வெல்ல அங்கு போய்க் கொண்டிருக்கிறேன்." ஒரு தனி மனிதனின் படையெடுப்பு... போய்க் கொண்டிருக்கிறான். ஏன்? அவன் தேவனை அவருடைய வார்த்தையின்படி எடுத்திருந்தான். அது சரியே. "நீர் வெல்லப் போகிறீர் என்று உமக்கு எப்படித் தெரியும், மோசே?" "தேவன் என்னிடம் அவ்வாறு சொல்லியிருக்கிறார், நான் வெற்றிகொள்ளத்தான் போகிறேன்." 25. ஏன், அங்கே எகிப்தில் அவர்களுக்கு இயந்திரமயமாக்கப்பட்ட அமைப்புகள் இருந்தன. அது அந்நேரத்தில் உலகத்திலேயே மிகப்பெரிய பட்டணமாக, அல்லது மிகப்பெரிய தேசமாக இருந்து, உலகத்தையே வென்று கீழடக்கி வைத்திருந்தது, அது இரதங்களையும் குதிரைவீரர்களையும் கொண்டிருந்தது. இங்கேயோ ஒரு வயோதிபன் தன்னுடைய மனைவியோடும் இரண்டு குழந்தைகளோடும், ஒரு கோவேறு கழுதையை நடத்திச்சென்றவாறு, நீண்ட வெண்தாடி மற்றும் தனது கையில் கோலும் இருக்க, அந்த முழு காரியத்தையும் வெற்றி கொள்ளும்படியாக போய்க்கொண்டிருக்கிறான். மேலும் அவன் அதைச் செய்தான். ஆமென். தேவன் எதையாகிலும் கூறும்போது, அவர் அதை தான் பொருள்படுத்துகிறார். "மோசே அவர்களே. நீர் அதைச்செய்யப் போகிறீர் என்று உமக்கு எப்படித் தெரியும்?" "தேவன் அவ்வண்ணமாகக் கூறியிருக்கிறார்; அது அதைத் தீர்த்துவைக்கிறது." ஆமென். எனக்கு அது பிரியம்: தேவனுடைய வார்த்தையை எடுத்துக்கொள்ளும் மனிதர்கள். 26. ஒரு சமயம் தன்னுடைய கரத்தில் ஒரு ரொட்டித்துண்டையும், சில சிறு மீன்களையும் வைத்திருந்த ஒரு சிறுவன் அங்கேயிருந்தான். அங்கே மொத்தமாக கிட்டத்தட்ட 5,000 பேர் சுற்றிலும் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். இயேசுவோ ஒரு பாறையின் மேல் அமர்ந்து, ஜனங்களிடம் பேசிக்கொண்டிருந்தார். அந்தச் சிறுவன் ஒருக்கால் அனுமதியின்றி பள்ளிக்குப் போகாமல் இருந்திருப்பான் (played hooky) என்று நினைக்கிறேன், நீங்கள் அதை என்னவென்று அழைக்க விரும் பினாலும், இந்தியானாவில் நாங்கள் அதை ஹூக்கி (hooky) என்றும், அனுமதியின்றி பள்ளிக்கு போகாத சிறுவன் (truant) என்றும் அழைக்கிறோம். ஒருக்கால் அவன் மீன்பிடிக்க வெளியே போயிருக்கும் போது அந்த மனிதரைக் கண்டான்; அவரைக்குறித்து ஏதோ வொன்றிருந்தது, அவர் பேசுவதைக் கேட்க அவன் விரும்பினான். சின்னஞ்சிறு பையன், அவன் இந்த கொஞ்சமான மதிய உணவை தன்னுடைய கரத்தில் எடுத்துக்கொண்டு வந்திருக்கிறான். ஏன், ஜனங்களோ ஏறக்குறைய மயக்கமடையும் அளவுக்கு மிகவும் பசியா யிருந்தார்கள். அப்போது "சாப்பிட ஏதாகிலும் உங்களிடம் உள்ளதா?" என்று கேட்டார். இங்கே ஒரு சிறு பையன் இருக்கிறான் அவனிடம் ஐந்து சிறு ரொட்டித்துண்டுகள் உள்ளன" என்றார்கள். "அவனை இங்கே கொண்டுவாருங்கள்" என்றார். 27. என்னே, அதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது, நான் அதை அப்படியே நாடக வடிவில் என் மனதில் வருணிக்க முடிகிறது. அந்தச் சிறுவனை என்னால் காண முடிகிறது... இப்பொழுது அந்த சிறுவன் அதை தன்னிடத்தில் வைத்திருக்கும் வரை, அவனிடம் இருந்தது மிக அதிகமில்லை. அதைக் கொண்டு அவன் தன்னை போஷித்து கொள்வதற்கே வாய்ப்பில்லை. ஆனால் ஒருமுறை அவன் அதை இயேசுவிடம் கொடுத்தபோதோ, இயேசுவானவர் அதைக் கொண்டு ஐயாயிரம் பேர்களை போஷித்தார். உங்களிடம் ஒரு வேளை மிக அதிகமாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் ஒருவிசை அதை தளர விட்டுப் பாருங்கள்; உங்களிடம் இருப்பதை அவருக்கென கொடுத்துப் பாருங்கள். நீங்கள் பெற்றிருக்கிற அந்த அளவு விசுவாசத்தை, அவருக்குள் வையுங்கள். அதை தளரவிட்டு, அது என்ன செய்கிறதென்று பாருங்கள். அது அவனுடைய (அந்த சிறுவனுடைய) கரத்தில் இருக்கும் வரை, அது அவ்வளவு அதிகமாக இல்லை. ஆனால் அது இயேசுவின் கரத்தை அடைந்த போதோ, அது ஏதோவொன்றாகிறது.. அது இங்கே அவனை மாத்திரம் போஷித்திருக்கும், அதைச் செய்வதும் கடினம் தான். ஆனால் அதுவோ ஐயாயிரம் பேரைப் போஷித்து, அதற்குப்பிறகு கூடைகள் நிறையவும் எடுக்கப்பட்டது. அல்லேலூயா. என்னே! நான் அதைக்குறித்து சிந்தித்துப் பார்க்கும்போது, என்னுடைய ஆத்துமா அசைவாடி நடுங்குகிறது. தேவன் அவருடைய வார்த்தையின்படியே இருக்கிறார்.... அவர், "இவர்கள் எல்லாரையும் உட்கார வையுங்கள்" என்றார். அவர் அந்தச் சிறுவனை கீழ்நோக்கிப் பார்த்து, "இதைச் செய்ய என்னால் கூடும் என்று நீ விசுவாசிக்கிறாயா?" என்று கேட்பதை என்னால் காண முடிகிறது. அவன், 'ஆம், இயேசுவே, நான் சரியாக உமக்கு அருகில் நின்றுகொண்டிருக்கிறேன். உம்மால் இதைச் செய்ய முடியும் என்று நான் விசுவாசிக்கிறேன்" என்றான். 28. குழந்தையை போன்ற விசுவாசமுடைய யாரோ ஒருவர் அவர் அருகே நின்று, "இயேசுவே, உம்மால் இதைச் செய்ய முடியும் என்று நான் விசுவாசிக்கிறேன்" என்று சொல்லக்கூடிய அப்படிப்பட்டவரைத் தான் அவர் இன்றிரவு கண்டுபிடிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார். அதைச் செய்யும்படியாக யாரோ ஒருவர் அவருக்குக் கிடைக்கக் கூடுமானால், அவர் அதைச் செய்வார். ஆனால் நீங்கள் பின்வாங்கிப்போய், "எனக்குத் தெரியாது, எனக்கு சற்று பயமாக உள்ளது; நான் உம்மை விசுவாசிக்கிறேன் என்பதை நான் அறிவேன், ஆனால் என்னால்-என்னால்.. முடியாது" என்று கூறுவீர்களானால், ஓ. அவரால் உங்களை உபயோகிக்க முடியாது. முதுகெலும்பு இல்லாமலிருந்தும் தன்னை ஒரு கிறிஸ்தவன் என்று உரிமை பாராட்டிக்கொண்டு. தங்களுடைய திடமான நம்பிக்கைகளின் பேரில் நிலைத்து நிற்க பயப்படுகிற நபராக இருக்கிறார்கள். அப்படிப்பட்ட கோழைகள் தேவனுக்கு அவசியமில்லை; அவரால் அவர்களை உபயோகிக்க முடியாது. வயதான படி ராபின்சனைப் (Buddy Robinson) போன்று, நான் வழக்கமாக அவருடைய புத்தகத்தை வாசிக்க விரும்புவதுண்டு. அவர் மிக அமைதியான மனிதராயிருந்தார்; அவர் "கர்த்தாவே, ரம்பத்தை ஒத்த அளவிலான முதுகெலும்பை எனக்குத் தாரும். என் ஆத்துமாவின் முடிவினுடைய விளிம்பைப் பற்றியதான அதிகமான அறிவை எனக்குத் தந்தருளும். எனது வாயில் பற்கள் இருக்கும் வரை பிசாசோடு நான் சண்டையிடட்டும், பின்னர் நான் மரிக்கும்வரை அவனை கடித்துக் கொண்டே இருப்பேன்" என்றார். அவ்விதமான விசுவாசமும் மன உறுதியும் தான் நமக்கு அவசியமாயுள்ளது: யாரோ ஒருவர் ஏதோவொன்றை செய்யலாம். "உம்முடைய வார்த்தையின் படியே, ஆண்டவரே. ஆம் ஐயா. உமது வார்த்தையின்படியே, "உம்முடைய வார்த்தையின்படியே, ஆண்டவரே" என்றான். "என் நாமத்தினாலே நீங்கள் எதைக் கேட்டாலும், அதை நான் செய்வேன்." அப்படியானால் "உம்முடைய வார்த்தையின்படியே, இதோ வருகிறேன், ஆண்டவரே." 29. நாம் நேற்றைய தினம் பேசிக் கொண்டிருந்தது போல, ஒரு நாளை நான் குறிப்பிட முடியும். மரித்துப் போன ஒரு மனிதன் அங்கேயிருந்தான். லாசருவாகிய அவன் மரித்து நான்கு நாட்களாகி கல்லறையில் அழுகிக் கொண்டிருந்தான். மார்த்தாளும் மரியாளும் அங்கே நின்றுகொண்டு இருப்பதை என்னால் பார்க்க முடிகிறது. "என் சகோதரன் மரித்துவிட்டான்; இப்பொழுது அவனுடைய சரீரம் நாறுமே, ஆனாலும், உம்முடைய வார்த்தையின்படியே ஆண்டவரே, நீர் அதைக் கேளும்; நீர் அதைச் சொல்லும் அது அவ்வாறே நடக்கும், என்றாள். அதுதான் இதுவாக இருக்கிறது: தேவனை அவருடைய வார்த்தையின்படி எடுத்துக்கொள்ளுங்கள். தேவன் கூறுவது என்னவாக இருந்தாலும், தேவனால் அதை செய்ய முடியும். தேவன் காலங்களினூடாக... அந்த இரவில் எபிரெய பிள்ளைகள் அக்கினி சூளையை நோக்கி வருவதை என்னால் காண முடிகிறது. அவர்கள் பாபிலோனில் இருந்தார்கள். அப்போது பாபிலோனில் என்னவொரு நிலை, என்னவொரு நேரம். அந்த வாலிபர்கள், தாங்கள் தோற்கடிக்கப்படப் போவதில்லை என்று உறுதியாக இருந்தார்கள்.. அவர்கள் அதற்காக தேவனுடைய வார்த்தையை எடுத்துக்கொள்ளப் போவதாயிருந்தார்கள். சாத்ராக்கள், மேஷாக், ஆபேத்நேகோக் களாகிய அவர்களில் இன்னும் அதிகமானவர்கள் இன்றிரவு நமக்கு அவசியமாயுள்ளது. 30. இராஜாவோ பிரகடனம் செய்து, அறிவிப்பு கொடுத்து, அவன், "எவனாகிலும் இந்த சிலையை பணிந்துகொள்ளமற்போனால், அவன் எரிகிற, அக்கினிச் சூளைக்குள் போடப்படுவான்" என்றான். அவர்களோ, "எங்கள் தேவன் எங்களை இந்த அக்கினிச் சூளை யிலிருந்து தப்புவிக்க வல்லவராயிருக்கிறார், அவர் தப்புவிக்காமல் போனாலும், நாங்கள் உமக்கு தலைவணங்க மாட்டோம்" என்றார்கள். அந்த தீர்மானம், அது எனக்கு பிடிக்கும். அதற்கு இராஜா, "அப்படியானால் அந்த பரிசுத்த உருளை மார்க்கத்தை இவர்களை விட்டு சுட்டெரித்துப் போடுவேன்" என்றான். எனவே அந்தப் பழமையான சூளையின் உஷ்ணத்தை, அது எப்பொழுதும் இருந்ததைக் காட்டிலும் ஏழு மடங்கு சூடுபடுத்தினான். அவர்களுடைய கைகளை அவர்களுக்குப் பின்னால் அவர்கள் கட்டுவதை நான் காண்கிறேன். அவர்கள் அந்த இரவு முழுவதும் ஒரு ஜெபக் கூட்டத்தைக் கொண்டிருந்தார்கள். அடுத்த நாள் மரண நடை (death march) வருகிறது, பலகை மேலே நடந்தார்கள், ஒரு பாதை, அது எதுவாக இருந்தாலும், கற்பாதையில் அவர்கள் அந்த சூளைக்குள் விழுந் தார்கள். மகத்தான பலம்பொருந்திய மனிதர்களை ஏற்பாடு செய்து நிறுத்தி, இராஜா இப்படி சொல்லுகிறதை என்னால் காண முடிகிறது. "இப்பொழுது, இந்த மார்க்கம் எவ்வளவு நல்லது என்றும், அவர் எந்த அளவு தம்முடைய வார்த்தையை நிறைவேற்றுகிறாரா அல்லது இல்லையா என்றும் நாம் பார்ப்போம்". 31. ஆனால் உருவச்சிலைகளை வணங்கக் கூடாது என்று அவர்கள் தேவனிடமிருந்து கட்டளைப் பெற்றிருந்தார்கள். தேவனை அவருடைய வார்த்தையின்படி எடுத்து கொள்ளுங்கள். அவர்கள் மரண நடையை துவங்குவதை என்னால் காண முடிகிறது; அக்கினி ஜூவாலையினால் வானங்கள் செந்நிறமாய் மாறின. "அதை (சொன்னதை) நீங்கள் திரும்பப்பெற விரும்புகிறீர்களா?" என்று கேட்கப்பட்டது. அவர்களோ, "இல்லை, ஐயா, எங்கள் தேவன் இதிலிருந்து எங்களை தப்புவிக்க வல்லவராயிருக்கிறார். ஆனால் உம்முடைய உருவச்சிலையை நாங்கள் பணிந்துகொள்ள மாட்டோம்" என்றார்கள். அவ்வண்ணமாக அவர்கள் மேலே பாதையில் போகிறார்கள். அவர்கள் அருகாமையில் போனபோது... நீங்கள் கவலைப்பட வேண்டாம்; தேவனை அவருடைய வார்த்தையின்படி எடுத்துக்கொள்ளுங்கள், அப்பொழுது பிசாசு உங்கள் மேல் உஷ்ணத்தை திருப்பிவிடுவான். அவன் அவ்வாறு செய்ய மாட்டான் என்று நீங்கள் நினைக்கவில்லையா. மேலே பாதையில் இவர்கள் போகிறார்கள். அவர்கள் மிகவும் அதிகமாக சூடாகி, சூடாகி, சூடாகிக் கொண்டே போகையில், சாத்ராக் மேஷாக்கிடம், "நீ முழுவதும் ஜெபித்துவிட்டாய் என்ற நிச்சயம் உனக்கு உள்ளதா?" என்று கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. ஆமாம், எல்லாமே சரியாக உள்ளது." அப்படியானால் போவோம்' 32. அவர்கள் தொடர்ந்து மேலே போய்க் கொண்டிருக்க, அங்கிருந்து வெளியேறும் கடுமையான உஷ்ணத்தினால் தள்ளாடத் தொடங்கி, பக்கத்தில் வந்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் ஒரு அடிதான், அவர்கள் அங்கே அதை நோக்கி போய்க் கொண்டிருக்கிறார்கள். அது ஒரு விசுவாசிக்கு இருண்ட காட்சியைப் போன்று தோன்றுகிறது, அது அவ்வாறு இல்லையா? நாம் நம்முடைய புகைப்படக் கருவியை (camera) திருப்புவோம். இங்கே ஏதோவொன்று நடந்து கொண்டிருக்கும் எல்லா நேரமும், அங்கே மேலேயும் கூட ஏதோ நடந்து கொண்டுதான் இருக்கிறது. நாம் அங்கே மேலே நோக்கி, என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று பார்ப்போம். அவர் தம்முடைய மகத்துவமான நீண்ட ஆசாரிய மேலங்கியை தம்மைச் சுற்றிலும் தொங்கவிட்டு கொண்டிருக்க, அவர் வீற்றிருந்தவாறு, அங்கு கீழே மறுபக்கம் கவனித்துக் கொண்டிருக்கிறதை என்னால் காண முடிகிறது. இந்த மகத்தான பிரதான தூதன் காபிரியேல் மேலே வந்து, தன்னுடைய பட்டயத்தை உறையிலிருந்து உருவி, நின்றுகொண்டு, "எஜமானரே, கீழே பாபிலோனில் கண்டீரா? ஏன், உம்முடைய வார்த்தையை எடுத்துக் கொண்டு, அதன்பேரில் நிற்கிற மனிதர்கள் மூன்று பேர் அதோ கீழே இருக்கிறார்கள். அவர்களோ இந்தக் காலையில் இவர்களை அக்கினியால் சுட்டெரிக்கப் போகிறார்கள்" என்று கூறுவதை என்னால் காண முடிகிறது. அவர், "ஆம், காபிரியேலே, நான் அவர்களைக் கவனித்துக்கொண்டு தான் இருக்கிறேன்" என்று கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. அதற்கு அவன், "பாரும், நான் உம்மைச் சார்ந்து உள்ளேன். நான் அங்கே கீழே போகட்டும்; இந்தக் காலையில் நான் அந்த காட்சியையே மாற்றி விடுகிறேன்" என்று கூறுவதை நான் கேட்கிறேன். அவனால் அதைச் செய்திருக்க முடியும் என்று நான் விசுவாசிக்கிறேன். அவரோ, "காபிரியேலே, நீ ஒரு நல்ல தூதனாக இருந்துவருகிறாய்; நான் உன்னை சிருஷ்டித்தது முதற்கொண்டு எப்போதுமே நான் உன்னிடம் சொல்வதை அப்படியே செய்திருக்கிறாய். ஆனால் அந்தப் பட்டயத் தைத் திரும்பவும் அங்கே உறையில் போட்டுவிடு என்று கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. 33. அங்கே அதை திரும்ப உறையில் போட்டுக் கொண்டு, காபிரியேல் அவருடைய பக்கத்தில் போய் நின்றுகொண்டான். இதோ வேறொரு தூதன் மிக விரைவாக வந்து திடீரென தோன்றுகிறான், அவனுடைய பெயர் தான் எட்டி; அவன் தண்ணீரின் மேல் அதிகாரம் உடையவனாயிருந்தான். அவன், "எஜமானே, கீழே பாபிலோனை பாரும். நீர் பாபிலோனைக் கருத்தில் கொண்டுள்ளீரா? ஏன், நான் அங்கே இறங்கி போகட்டும். ஜலப்பிரளயத்தின் அழிவின் போது அந்த தண்ணீர்களின் மேல் நீர் எனக்கு அதிகாரம் கொடுத்தீர். நான் ஊற்றுக்கண்களை பிளந்து வளிமண்டலங்களை கீழே கொண்டு வந்து, முழு பூமியையும் நான் மூழ்கடித்தேன். இந்தக் காலையில் நான் அங்கே கீழே போகட்டும். நான் பாபிலோனை பூமியின் முகத்திலிருந்து மூழ்கடித்து விடுகிறேன்" என்று கூறுவதை என்னால் கேட்க முடி கிறது. அவனால் அதைச் செய்ய முடியும் என்று நான் விசுவாசிக்கிறேன். அது சரியே. "நீர் அதைப் பார்த்தீரா?" என்று கேட்டான். ஆமாம், நான் இரவு முழுவதும் அவர்களைக் கவனித்துக்கொண்டு தான் வருகிறேன் என்றார். ஆமென். 34. அவருடைய கண் அடைக்கலான் குருவியின் மீது உள்ளது, அவர் என்னைக் கவனிக்கிறார் என்று நான் அறிவேன். நான் சந்தோஷமாயிருப்பதால் பாடுகிறேன். அவர் ஒவ்வொரு மணிவேளையும் கவனித்துக் கொண்டிருக்கிறார். நீங்கள் செய்து கொண்டிருக்கிற ஒவ்வொன்றும் அவருக்குத் தெரியும். அது சரியே. அவர், "நான் இரவு முழுவதும் அவர்களை கவனித்தேன். தூதர்களாகிய நீங்கள் மகத்தான மனிதர்கள் தான், நான் செய்ய வேண்டுமென்று உங்களிடம் சொன்னதை நீங்கள் செய்துள்ளீர்கள். ஆனால் இந்தக் காலையில் உங்களை அனுப்பிவிட என்னால் முடியாது, ஏனென்றால் நானே போகிறேன், இது மிகப்பெரிய வேலை" என்று சொன்னார். ஆமென். அவர், "பாருங்கள், இன்னும் அவர்களுக்கு ஒரு அடிதான் உள்ளது. அவர்கள் சரியாக உள்ளே போய்க்கொண்டிருக்கிறார்கள்" என்றார். சிலசமயங்களில் தேவன் அமைதியாக இருந்து, அது கடைசி நிமிடத்திற்கு வரும்படி விட்டுவிடுகிறார். அவசரப்படுவது நீங்கள் மாத்திரம் தான், தேவனல்ல. அவர் என்ன செய்யப்போகிறார் என்று அவருக்குத் தெரியும். நீங்கள் வெறுமனே அவரை விசுவாசியுங்கள்; அவர் - அவர் பதில் அளிக்கும் பக்கத்தில் தான் இருக்கிறார். 35. அவர் தம்முடைய சிங்காசனத்தைவிட்டு எழுவதை என்னால் காண முடிகிறது. அவர் இறங்கி நடந்து வருவதை என்னால் காணமுடிகிறது. அவருடைய ஆசாரிய வஸ்திரங்கள் அவ்விதமாக அவரைச் சுற்றிலும் தொங்கி கொண்டுள்ளது, எல்லாமே அவருக்கு கீழ்ப்படிவது போன்ற, மகத்துவமிக்க மகா இராஜாவாக வருகிறார். அங்கே வடக்கிலே பின்னால் தொங்கிக் கொண்டிருந்த ஒரு மகத்தான பெரிய இடிமுழக்கத்து மேகத்தை (thunderhead) என்னால் காண முடிகிறது; அவர், "கிழக்கு காற்றே, தெற்கு காற்றே. வடக்கு மற்றும் மேற்கு காற்றுகளே, இங்கு வாருங்கள்!" என்று கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. மனிதனைத் தவிர எல்லாமே அவருக்குக் கீழ்ப்படிகின்றன. மனிதன் அதைக்குறித்து அதிகம் அறிந்திருக்கிறான். பின்பு அவன் செய்கிறான் அல்லது செய்ய நினைக்கிறான். அவர், "அந்த இடிமுழக்க மேகத்தின் (thunderhead) மேல் ஏறி, அதிசீக்கிரமாக இங்கு அதைக் கொண்டுவா; நான் உனக்கு ஒரு பணியை வைத்திருக்கிறேன்" என்று கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. காற்றுகளும் அலைகளும் அவருக்குக் கீழ்ப்படிகின்றன. மற்ற எல்லாமே அவருக்குக் கீழ்ப்படிகின்றன. அந்தப் பெரிய இடிமுழக்க மேகமானது (thunderhead) அங்கே உருண்டு வந்து, ஒரு இரதத்தைப் போன்று அதன்மேல் நெருங்கிப் போவதை என்னால் காண முடிகிறது. என்னே! மேலே அது சென்றடைந்து வளைந்து வளைந்து செல்லும் வடிவிலுள்ள மின்னலாக வானங்களில் மோதியடித்து, அவர் செவிசாய்த்து கேட்கக்கூடிய பக்கத்தில்தான் (hearing side) இருக்கிறார் என்பதை அவர்கள் அறிந்து கொள்ளும்படிச் செய்கிறார். அல்லேலூயா! "நான் உங்களை கவனித்துக்கொண்டு தான் இருக்கிறேன்; நீங்கள் எங்கேயிருக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன்." அந்த மின்னலைக் கொண்டு வெடிக்கச் செய்கிறார்... 36. அவர் அதனூடாக கடந்துபோகையில், சாத்ராக், "அதெல்லாம் சரியாகிவிடும். கவலை வேண்டாம்" என்று கூறுவதை நான் கேட்கிறேன். அப்போது அவர் ஜீவ நதியின் பக்கமாக கடந்துசென்று ஜீவ நதியிலிருந்து உள்ளங்கையை எடுப்பதை என்னால் காணமுடிகிறது. ஏறக்குறைய சாத்ராக்கும், மேஷாக்கும். ஆபேத்நேகோவும் அந்த அக்கினிச்சூளைக்குள் அடியெடுத்து வைக் கும் நேரத்தில், அங்கே ஒருவர் அவர்கள் பக்கமாக நின்றுகொண்டு அக்கினி அவர்களை தொடாதபடி காத்துக் கொண்டிருந்தார். அங்கே உள்ளே மணிகணக்காக மகிழ்ச்சி இருந்தது. இராஜாவோ, "கதவைத் திறந்து அவர்கள் அங்கேயிருக்கிறார்களா என்று பாருங்கள்" என்றான். அவன், "நீங்கள் மூன்று பேரைத்தான் உள்ளே போட்டீர்கள் என்று நினைத்தேன்; நானோ நான்கு பேரைக் காண்கிறேன். ஒருவர் தேவ புத்திரனைப் போன்று காணப்படுகிறார்" என்றான். ஏன்? யாரோ ஒருவர் தேவனை அவருடைய வார்த்தையின்படி எடுத்துக்கொண்டார். பெந்தெகோஸ்தே நாளில், 120 பேர் ஒரு மேலறைக்குள் பிரவேசித்து, தேவனை அவருடைய வார்த்தையின்படி எடுத்துக்கொண்டனர். "நல்லது, நல்லது. அது எவ்வாறு இருக்கப்போகிறது? பரிசுத்த ஆவி என்பது என்ன? பிதாவினுடைய வாக்குத்தத்தம் என்று நீ எதை அர்த்தப்படுத்துகிறாய்?" அது எவ்வாறு வரும் என்று எனக்குத் தெரியாது; அது வரும்போது. அது என்ன செய்யப்போகிறது என்பதும் எனக்குத் தெரியாது; ஆனால் நான் தேவனை அவருடைய வார்த்தையின்படி எடுத்துக்கொள்கிறேன்." ஆமென். 37. இவர்களை எருசலேமைவிட்டு தூரமாக இழுத்துச்செல்லுவீர்களா, உங்களால் அதைச் செய்ய முடியாது. பரிசுத்த ஆவி வரும் மட்டுமாக, அங்கேயே தரித்திருக்கும்படி அவர்களுக்கு ஒரு கட்டளை (commission) உண்டாயிருந்தது. அல்லேலூயா! அவர்கள் தேவனை அவருடைய வார்த்தையின்படி எடுத்துக் கொண்டார்கள். "அது எப்படி இருக்கப்போகிறது?" "கேள்வி அதுவல்ல. அது வரும் மட்டுமாக தரித்திருப்பது தான் அவசியம்." ஆமென். "எவ்வளவு காலம்?" அது வரும் மட்டுமாக, சரியாக அங்கேயே தரித்திருங்கள்." மேலும், பரிசுத்த ஆவியானது பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல (like a rushing mighty wind) வந்தபோது, தேவனுடைய வார்த்தையானது உறுதிப்படுத்தப்பட்டு, அவர்கள் அங்கிருந்து தெருக்களுக்குள்ளும், எல்லா இடங்களுக்கும் போனார்கள். தேவனுடைய ஜனங்கள் தேவனுடைய வார்த்தையை எடுத்துக் கொள்வதற்கான நேரம் இதுவே. "விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின்தொடரும்" என்று மாற்கு 16 கூறுகிறது. தேவனை அவருடைய வார்த்தையின்படி எடுத்துக்கொள்ளுங்கள். "வியாதிய ஸ்தர்மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமடைவார்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? நம்முடைய தலைகளைத் தாழ்த்துவோம். 38. கர்த்தராகிய இயேசுவே, உம்மை உம் வார்த்தையின்படி எடுத்துக்கொண்டுள்ள மனிதர்களையும், ஸ்திரீகளையும் குறித்து நான் எண்ணிப்பார்க்கிறேன். ஓ நீர் ஒருபோதும் விலகவோ அல்லது கைவிடவோ மாட்டீர்; நீர் எப்போதுமே சரியான நேரத்தில் வருகிறீர். கர்த்தராகிய இயேசுவே, இன்றிரவு வாரும், உம்மை இங்கே வெளிப்படுத்தியருளும், ஒருக்கால் முயன்று பார்த்த வியாதிப்பட்டுள்ள அநேகர் இங்கிருக்கலாம்; இவர்களுக்கு உதவிபுரிய மருத்துவர்கள் தாங்கள் எவ்வளவு கடினமாக முடியுமோ அவ்வளவு கடினமாக முயன்றுபார்த்தும் அவர்களால் அதைச்செய்ய முடியவில்லை. ஒருக்கால் அவர்களுடைய வாழ்க்கையில் அங்கே பின்னால் ஏதோவொன்று இருக்கலாம். அது சரிசெய்யப்படும் வரைக்கும் அந்த பாம்புக்கடியானது குணமடைய முடியாது. ஆனால், இன்றிரவில், இவர்கள் தாமே எல்லாவற்றையும் ஒருபக்கமாக ஒதுக்கிவைத்துவிட்டு, "தேவனே, இது உம்முடைய வார்த்தை, இதோ நான் வருகிறேன்; நான் உம்மை உம்முடைய வார்த்தையின் படியே எடுத்துக்கொள்கிறேன். ஜனங்கள் சுகமடைவதை நான் கண்டிருக்கிறேன்; நான் அதைக்குறித்து கேள்விப் பட்டிருக்கிறேன். நான் மற்றவர்களை கவனித்ததுண்டு; முடக்குவாதத்தினால் தாக்கப்பட்ட என்னுடைய அயலகத்தார்கள் இப்பொழுது நடப்பதையும், குருடர் இப்பொழுது காண்பதையும் நான் பார்த்திருக்கிறேன். மிகமோசமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவர்களால் கைவிடப்பட்டவர்கள், இப்பொழுதோ அவர்கள் பிழைத்து நலமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறார்கள். இப்பொழுதும், கர்த்தாவே, உம்முடைய வார்த்தையின்படியே, நானும் கூட இன்றிரவில் வருகிறேன்" என்று கூறுவார்களாக. இதை அருளும், கர்த்தாவே. பதி லளிக்க உமது ஆவியானவர் தாமே இங்கேயிருப்பாராக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நாங்கள் இதை வேண்டிக்கொள்கிறோம். ஆமென். சரி, உங்களுக்கு விருப்பமானால். [ஒலிநாடாவில் காலியிடம்- ஆசிரியர்.] ஏறக்குறைய முப்பது நிமிட நேரம், நான் என்னில் அனலடையத் துவங்கி, கர்த்தரைக் குறித்து பேச முடிந்தது. சரி. [ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்...?... விசுவாசிகளின் மத்தியில் ஒரு அவிசுவாசி அமர்ந்திருக்கலாம். பிசாசுகள் எப்பொழுதும்... நாம் அதன் பேரில் இந்தப் பிற்பகல் வேளையில் பேசினோம்: அவைகள் உண்மையில் ஜனங்கள் மத்தியில் கட்டவிழ்க்கப்படும் ஜீவன்களாகும் (beings). இங்கே கொஞ்ச காலத்திற்கு முன்பு, கனடாவிலுள்ள கால்கரியில் (calgary). அது கண்ணால் பார்க்கக்கூடியதாக இருந்தது (become visible). அநேக நேரங்களில் பார்க்கும்போது, சில சமயங்களில் அவைகள் ஒரு பெரிய சிலந்தியைப் போன்றோ, ஒரு பெரிய கறுத்த நிழலைப்போன்றோ காணப்படுகிறது. சிலசமயங்களில், அது... ஒருசமயம் காக்காய் வலிப்புடைய ஒருவரிடமிருந்து வந்த ஒன்றை நான் கண்டேன், அது ஒரு ஆமையை போன்று காணப்பட்டது. அதன் நீளமான கால்கள் கீழ்நோக்கி இருக்க. அவ்விதம் மேலே சுழன்றுகொண்டு (whirled up), சுற்றிலும் மிதந்து கொண்டிருந்தது. அங்கே கனடாவிலுள்ள கால்கரியில், இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட ஜனங்கள் இருந்த போது, அவர்கள் ஒவ்வொருவருமே அதை கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது நீங்கள் எங்காவது ஒரு குண்டூசியை கீழே போட்டாலும் அதன் சத்தத்தைக் கேட்டிருக்க முடியும், அந்தப் பெரிய கறுத்த நிழல் ஜனங்களின் மேலே அங்குமிங்குமாகப் போய்க்கொண்டிருந்தது. எல்லாருமே அவ்விதமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதன்பிறகு அது சுற்றிக் கொண்டே, கட்டிடத்திற்கு வெளியே போய்விட்டது. நண்பர்களே. இப் பொழுது நாம் சபையில் விளையாடிக்கொண்டிருக்க வில்லை (We're not playing church now, friends). எனவே நீங்கள் பயபக்தியாயிருங்கள். இங்கே, கொஞ்ச காலத்திற்கு முன்பு, ஒரு கூட்ட பையன்கள் என்மேல் நையாண்டி விளையாட்டு விளையாட விரும்பினார்கள். இந்த மனதை வசியப்படுத்துபவர்களைக் (hypnotizers) குறித்து நீங்கள் கேள் விப்பட்டிருக்கிறீர்களா? இந்த இராணுவ முகாம்களுக்குப் போய், யாரோ ஒருவரை நாயைப்போன்று குரைக்கவைப்பதும் மற்றும் அதைப்போன்றவைகளையும் செய்வது அவர்களில் ஒருவன் அந்தக் கூட்டத்தில் இருந்தான். அவ்வண்ணமாக அவன் அப்படியே சாமர்த் தியமாய் நடந்துகொண்டிருந்தான். பல்லாயிரக்கணக்கான ஜனங்கள் அங்கே இருந்தார்கள். அப்போது தொடர்ந்து ஒரு விநோதமான ஆவியை உணர்ந்த வண்ணம் இருந்தேன். அது யாரென்று அம்மனிதனை நான் கண்டுபிடிக்கும் வரையில் சுற்றிலும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்து, நான், அதைச் செய்யும்படி பிசாசு உன் இருதயத்தினுள் வைத்தது ஏன்? தேவன் அதற்காக உனக்கு பலனளிப்பார்" என்றேன். அதற்கு அவனோ, என்னிடம் எந்த தவறுமில்லை" என்றான். நானோ, "நீ மனதை வசியப்படுத்துதலைச் செய்யும் ஒருவன் (hypnotizer)" என்றேன். அப்பொழுது அவர்கள்... ஒருவாறு பார்க்கத் தொடங்கினார்கள். நான், "ஆமாம், நீ தான், தேவன் உனக்குப் பலனளிப்பார்" என்று கூற, அவர்கள் அவனை அங்கிருந்து தூக்கிச் சென்றார்கள், அவன் இன்றிரவும் முடக்குவாதத்தோடு தான் இருக்கிறான். அதைச் செய்யாதீர்கள். பயபக்தியாயிருங்கள் அல்லது இங்கு இருக்காதீர்கள். இப்பொழுது, அது உங்களைப் பொறுத்தது. சரி. X, நூறு...[ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்....அங்கே வெளியில் இதை ஏற்றுக் கொள்ளுங்கள். அப்படியானால் அது என்ன? சத்தியம் தான் கூறப்பட்டுள்ளது என்று தேவன் சாட்சிபகருவதாய் அது இருக்கிறது. இப்பொழுது, நீங்கள் இதை உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். அப்பொழுது தேவன் சுகப்படுத்துவார். கூட்டம் நடந்துகொண்டிருப்பது முதல் இங்கே இந்தக் கூட்டத்தில் எத்தனை பேர் சுகமடைந்துள்ளீர்கள்? உங்கள் கரங்கள் உயர்த்தப்படுவதை நாங்கள் காணட்டும், எல்லா விடங்களிலும், சுகமடைந்தவர்களா? அங்கே பாருங்கள். புரிகிறதா? [ஒலிநாடாவில் காலியிடம் ஆசிரியர்... வேதாகமத்தில் பார்த்து, அதை கவனமாக ஆராய்ந்து, அது சத்தியம்தான் என்பதை நிதானித்துப் பாருங்கள்; அவர்களுடைய விருப்பங்களை (affections) தேவன்மேல் வைத்தபோது, தேவன் அவர்களை சுகமாக்கினாரே. அது சரிதானா, எப்பொழுதாவது யாராகிலும் சுகமடைந்தார்களா? நீங்களும் சரியாக அவ்வித மாகத்தான் அதைச் செய்தீர்களா? நீங்கள் தேவனை அவருடைய வார்த்தையின்படி எடுத்தபோது, அவர் அதைச் செய்தாரே. நாம் அதைச் செய்யக்கூடிய ஒரே வழி என்னவென்றால் தேவனை அவருடைய வார்த்தையின்படி ஏற்றுக் கொள்வது தான். இப்பொழுது, இன்றிரவில் இந்த ஜெப வரிசையில் ஏறக்குறைய இருபது பேரை நாம் பெற்றுள்ளோம் என்று நினைக்கிறேன். அவ்வாறு தான் நினைக்கிறேன். தங்கள் அட்டைகளை வைத்திராமல் இருக்கும் அவர்களில் சிலர் ஒருக்கால் இருக்கிறார்களோ என்றும், ஒருவேளை செவிடாகவோ அல்லது ஏதோவொன்றாகவோ இருக்கிறார்களோ? என்றும் காண விரும்புகிறோம். பில்லி, அவர்களை, ஏறக்குறைய எல்லாரையும் நீ கொண்டுவந்து விட்டாயா? அவர்கள் எல்லாரும் அங்கேயிருக்கிறார்கள் என்று நினைக்கிறாயா? எல்லாமுமே (Everything)? சரியா? மகனே. இதுதான் உன்னுடைய முதலாவது சுகவீனரா? சரி. வாருங்கள். ஸ்திரீயே. [ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்.] பாருங்கள்? 2